அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள வைத்திலிங்கம், கடந்த 2001-2006 மற்றும் 2011- 2016 ஆகிய காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில்
ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் என்று அதிமுகவில் இரு அணிகளாக பிரிந்த போது வைத்திலிங்கம் ஓபிஎஸ் உடன் சேர்ந்து கொண்டார்.
ஓபிஎஸ்-ன், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்தியலிங்கம் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்துக்குச் சென்ற வைத்தியலிங்கம், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 66 ஆக இருந்தது வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவு, சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், செங்கோட்டையன் ஆகியோர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சி தாவினர். இன்று வைத்திலிங்கமும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்க ளின் எண்ணிக்கை 62ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சற்று சரிவை சந்திக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.






