தமன்னா-னா சும்மாவா..?
கோவாவில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் ‘கவர்ச்சி’ குத்தாட்டம் போட்ட நடிகை தமன்னா, தற்போது சோஷியல் மீடியாக்களில் டிரெண்டிங்கில் இருக்கிறார்.

பால் நிற மேனி:-
நடிகை தமன்னா, தனது 36 வயதிலும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு அவர் பின்பற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி முறைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பால் நிற மேனியைக் கொண்டு நடிகை தமன்னா தற்போது அதிக அளவில் பொது நிகழ்ச்சிகளில் கவர்ச்சி நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதற்கு லட்சக்கணக்கில் சம்பளமும் வாங்கிக் கொள்வதாக கூறப்படுகிறது.

இதுவே தென்னிந்திய சினிமாவில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்றால் லட்சக்கணக்கிலும்; பாலிவுட் என்றால் கோடிக்கணக்கிலும் நடிகை தமன்னா சம்பளம் பெறுவதாக சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

காதலும், சர்ச்சையும் :-
நீண்ட காலமாக நடிகர் விஜய் வர்மாவைக் காதலித்து வந்த தமன்னா, தற்போது அவருடனான உறவை முறித்துக் கொண்டதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

புத்தாண்டு கொண்டாட்டம்: கவர்ச்சி ஆட்டம்
2026-ஆம் ஆண்டை வரவேற்க கோவாவில் உள்ள ‘பாகா’ பீச்சில் நடைபெற்ற ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியில் தமன்னா கலந்து கொண்டார். அதில், “படு கவர்ச்சி” உடையில் ரசிகர்கள் முன் குத்தாட்டம் போட்டு கவர்ந்து உள்ளார். கடலோரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாலிவுட், டோலிவுட் என பல திரையுலக நடிகைகள் குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார்கள்.










