கூட்டணி பற்றி ஒவ்வொருவரிடமும் பேசிமுடித்தவுடனே டெல்லியில் இருந்து ஆட்கள் வந்துவிடுகிறார்கள் என்று தவெக நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார்.

தினகரன் – அதிமுக திடீர் கூட்டணி
20026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கூட்டணியை அமைத்துக் கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், யாரும் எதிர்பாராத வகையில் அமமுக பொதுச செயலாளர் டி.டி.வி தினகரன் அவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து விட்டார். அதிமுக உடனும், எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் உள்ள சண்டையை மறந்து விட்டு மீண்டும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார், டிடிவி. தினகரன்.

எங்களோடு வர நினைத்தார்!
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “டிடிவி தினகரன் தவெக உடனான கூட்டணிக்கு வர நினைத்தார்; சூழல் காரணமாக வரவில்லை. ஒவ்வொருவரிடமும் கூட்டணி பேசும்போது டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள். என்ன பிரச்னை என்று எங்களுக்குதான் தெரியும்; நான் சொல்லாமல் இருக்கும்வரை நல்லது” என்று தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும், ராமதாஸ் தரப்பிடம் தவெகவினர் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதாகவும்
செங்கோட்டையன் மறைமுகமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.






