இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி உடையில் இருக்கும் வள்ளுவர் படத்துடன் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
காவி வள்ளுவர் – சர்ச்சை
இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. உடனே சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ள தமது சர்ச்சைக்குரிய புகைப்படம் நீக்கம் செய்யப்பட்டு விட்டது.
காவி வள்ளுவர் புகைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
கனிமொழி கண்டனம்
இதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார்” என்று கூறியுள்ளார்.






