ஓபிஎஸ் ஆதரவாளர் ஆர். வைத்திலிங்கம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

பதவி ராஜினாமா :
திமுகவில் இணைவதற்கு முன்னதாக, இன்று காலையிலேயே தனது ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவியை சபாநாயகர் அப்பாவுவிடம் ஒப்படைத்து ராஜினாமா செய்தார்.

வரவேற்பு:
இவரை திமுக துணைப் பொதுச்செயலாளர் அன்பில் மகேஷ் மற்றும் முக்கிய அமைச்சர்கள் வரவேற்றனர்.

தலைமை மீதான அதிருப்தி:
இதைத் தொடர்நது செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், திமுக தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு தனி நபர் பிடியில் இருப்பதாகவும், ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், திமுகவே அண்ணா தொடங்கிய “தாய் கழகம்” என்றும், சமூக நீதியைக் காக்க மீண்டும் தாய் கழகத்திற்கே வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முதலமைச்சரின் செயல்பாடுகள்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிர்வாகத் திறமை ஈர்க்கப்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், விரைவான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் நிலவுவதாக வைத்திலிங்கம் கூறினார்.
அரசியல் முக்கியத்துவம்:
ஓ. பன்னீர்செல்வம் அணியில் 2வது பெரிய தலைவராகக் கருதப்பட்ட வைத்திலிங்கம் விலகியது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது வைத்திலிங்கமும் இணைந்திருப்பது டெல்டா மாவட்டங்களில் திமுகவைப் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரமாண்ட விழா :-
வரும் 26-ஆம் தேதி தஞ்சாவூரில் ஒரு பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெறும் என்றும், அதில் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் முறைப்படி இணைய உள்ளதாகவும் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.






