திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடந்த முறை 3 தொகுதிகளை ஒதுக்கிது போல இந்த முறையும் அதே எண்ணிக்கையிலான 2 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., சிபிஎம், சிபிஐ, தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் என வலுவாக உள்ளது. கூட்டணி வைத்து பார்த்தால், இந்தமுறையும் திமுக தான் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.

கூட்டணிகட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை கொடுப்பது என்பது பற்றி பேசுவதற்கு திமுக-வில் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் திமுக தனது கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த 3 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட உள்ள 2 தொகுதிகள் என்னென்ன என்பது விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.