“வெல்லும் 200, படைப்போம் வரலாறு, வெல்லுவோம் ஒன்றாக” என்று முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் திமுக மாநாட்டில் சூளுரைத்துள்ளார்.
திமுகவில் இணைந்த 10,000 மாற்றுக்கட்சியினர்
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில்,
புதிதாக ஓபிஎஸ் அணியில் இருந்து திமுகவில் சேர்ந்த வைத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் உட்பட சுமார் 10,000 பேர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு துண்டு அணிவித்து முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.

வெல்வோம் -200! – முதல்வர் உறுதி
இவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்படி நெருங்கக்கூடிய தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெறப்போகிறோம் என்பது யாருக்கும் எள்ளளவு சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேர்தல் பணியாற்ற உறுதி ஏற்போம், சபதம் எடுப்போம், மீண்டும் திராவிட மாடல் அரசு உதயமாகி ஏற்கெனவே செய்த சாதனைகளை மிஞ்சக் கூடிய அளவிற்கு மேலும் பல சாதனைகளை உருவாக்கி தருவதற்கு நம்முடைய பணி மும்முரமாக இருக்க வேண்டும். வெல்லும் 200, படைப்போம் வரலாறு, வெல்லுவோம் ஒன்றாக” என்று முதல்வர் கூறினார்






