தற்கொலைக்கு முயன்ற தவெக நிர்வாகி அஜிதா ஆக்னலின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜிதா ஆக்னல். தவெக நிர்வாகியான இவர் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், வேறு ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனால் தவெக தலைமை அலுவலகமான பனையூரில் விஜய்யின் காரை மறித்து போராட்டம் நடத்தினார். அத்துடன் தனக்கு நீதி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களுடன் போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இந்த நினையில் பதவி கிடைக்காத மனஉளைச்சலில் தூக்க மாத்திரைகளை அதிக அளவு உட்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தேறி வந்த நிலையில், இன்று (டிசம்பர் 27) அவரது உடல்நிலை நிலைமை மோசமானது. இதையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் தூத்துக்குடி மாவட்ட தவெகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.





