பொது விடுமுறை, குடியரசு தினம், நாடுமுழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் என தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே இந்த வாரமே தங்களின் வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) வரும் 17ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை அன்று நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கி விடுமுறை
இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக, வார இறுதி விடுமுறை நாட்களுடன் சேர்த்து மொத்தம் 4 நாட்களுக்கு வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
- ஜனவரி 24, சனிக்கிழமை – விடுமுறை.
- ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை – பொது விடுமுறை.
- ஜனவரி 26, திங்கட்கிழமை குடியரசு தின விடுமுறை.
- ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.
முக்கியக் கோரிக்கைகள் என்ன?
வங்கி ஊழியர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் சில முக்கிய கோரிக்கைகளுக்காக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
5 நாள் வேலை வாரம்: வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் (அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை). இதற்கு ஏற்கனவே கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்று வங்கி ஊழியர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பணியாளர்கள் நியமனம்:
காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
நேரடிச் சேவைகள்: காசோலை (Cheque) பரிமாற்றம், பணம் டெபாசிட் செய்தல் மற்றும் வங்கிக் கிளையில் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும்.
ATM சேவைகள்: தொடர் விடுமுறையால் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலை
மத்திய அரசு மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) இந்தப் போராட்டத்தைத் தவிர்க்க ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படவும் வாய்ப்புள்ளது.
பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை:
நமக்கு அவசர பணத்தேவைகள் அல்லது வங்கிப் பரிவர்த்தனைகளை வரும் ஜனவரி 23ஆம் தேதிக்குள்ளேயே (வெள்ளிக்கிழமை) முடித்துக்கொள்வது நல்லது என்று வங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






