பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஆகிய முப்பெரும் விழாகள் நடைபெற்றது.
மேலப்பாளையதம் பஜார் திடலில் நடைபெற்ற இவ்விழாவில் தவிகா கட்சியின் கொள்கைப் பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத், கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசியவர், “தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதனால் அச்சம் உருவாகிவிட்டது. அண்ணா, எம்.ஜி.ஆர். எழுதிய அரசியல் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை விஜய் எழுதப்போகிறார்” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
திமுகவால் சிதைந்த கட்சிகள் :-
மேலும், “தி.மு.க.வுக்கு மாற்றாக உருவான கட்சிகள் இன்று தி.மு.க.விடம் தங்களை இழந்துவிட்டது. தி.மு.க.-விற்கு மாற்றாக தொடங்கிய ம.தி.மு.க.வை, தி.மு.க.விடம் தொலைத்துவிட்டு மதுரை, திருச்சி என கட்சியின் தலைவர் வைகோ ம.தி.மு.க.வை தேடி வருகிறார்.
திமுகவுக்கு மாற்றாக தொடங்கப்பட்ட தே.மு.தி.க.வை துண்டு துண்டாக வெட்டி விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விற்பனை செய்ய தயாராகிவிட்டார். மாற்று என டார்ச் விளக்குடன் வந்த கமல்ஹாசன் அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் ஓய்வு எடுக்கிறார். என்று திமுக கூட்டணி மற்றும் பிற கட்சிகளை கடுமையாக விமர்சித்து நாஞ்சில் சம்பத் பேசினார்.
விசில் அடிக்க தடையா..?
“போகிற போக்கை பார்த்தால் எல்லையில் நாட்டை பாதுக்கும் ராணுவ கேப்டன் கூட விசில் அடிக்கக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிடுவார் என தோன்றுகிறது என்று நகைச்சுவையாக திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.






