நீலகிரி மாவட்டம்
ஊட்டியில் கஞ்சா விற்ற குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா விற்ற இளைஞர் கைது

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கடந்த 21ஆம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊட்டியை சேர்ந்த குரூஸ் என்ற இளைஞர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்

உடந்தையாக இருந்த காவலர்

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா விற்பனைக்கு போலீசார் ஒருவரும் உடஞ்சையா இருந்தது  தெரியவந்தது.

காவலர் பணியிடை நீக்கம்

ஊட்டி மத்திய போலீஸ் நிலைய போலீஸ்காரரான நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நசீர் அகமது என்பவர் எனக்கு கொஞ்சம் விற்பனை செய்தவர்களுக்கு உடனடியாக இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவலர் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டதுடன், நசீர் அகமதுவை பணியிடை நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. நிஷா உத்தரவிட்டார்.