மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேருந்து நிலையத்தை இடித்து விட்டு முதற்கட்டமாக 8 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி புதிய பேருந்து நிலையம் மற்றும் விரிவாக்க பணிகள் தொடங்கியது.

இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் மற்றும் விரிவாக்க பணிக்காக அரசு நிதி ஒதுக்கிய 8 கோடி போதாது என்றும் மேலும் 8 கோடிக்கான திட்ட மதிப்பீட்டை உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் அரசிடம் கோரியுள்ளது.

கடைகள் இடிப்பு

மேலும், பேருந்து நிலையம் மற்றும் வணிக கடைகளுடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், நகராட்சி நிர்வாகம் சார்பில் சந்தை பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை இடிக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றுது.

மாற்று ஏற்பாடு

இடிக்கப்பட்ட கடைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.