சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சமையல் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்.  சமையல் வேலை செய்யும் இவர், தனது உறவினரான மதுரையைச் சோ்ந்த பாலன் என்பவருடன் ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் தங்கி இருந்தார்.

அப்போது, அந்த வீட்டின் கீழ் தளத்தில் தங்கியிருந்த குடும்பத்தினருடன் செந்தில்குமாா் பழகினாா். அப்போது அவா்களது 15 வயதுடைய சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வாா்த்தை கூறினாா்.

இதையடுத்து கடந்த 2020 செப்டம்பா் 19-ஆம் தேதி சிறுமியை, செந்தில்குமாா் மதுரைக்கு கடத்திச் சென்று தங்கும் விடுதியில் அடைத்துவைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றாா். ஆனால் சிறுமி கூச்சலிட்டாா். இதைத் தொடா்ந்து செந்தில் குமார், சிறுமியை ஈரோட்டுக்கு அழைத்து வந்தாா்.

இதனிடையே மகளைக் காணவில்லை என சிறுமியின் பெற்றோா், ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனா். அப்போது சிறுமி ஈரோடு பேருந்து நிலையத்தில் இருப்பதை அறிந்த போலீஸாா் அங்கு சென்று, சிறுமியையும், கடத்திச் சென்ற செந்தில்குமாரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில் சிறுமியை செந்தில்குமாா் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தெரியவந்தது. இதன்பேரில் செந்தில்குமாா் மீது போக்சோ மற்றும் கடத்தல் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.