தமிழ்நாட்டில் அறிவுசார் நகரம் மற்றும் சென்னைக்கு அருகில் 2000 ஏக்கர் பரப்பளவில் உலகளாவிய நகரம் ஆகிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பப
சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் 706 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18,720 படுக்கை வசதிகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய பணியாளர் விடுதி அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு மேற் கொண்ட இத்தகைய முன்னோடி நடவடிக்கைகளின் காரணமாக தொழில் வளம்பெருகி, 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாடு 11.19 சதவீதம் எனும் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. மேலும், மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 41.23 சதவிதம் பங்க ளிப்புடன் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது.
திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் ஒசூர் ஆகிய இடங்களில் மொத்தம் 1070 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. மேலும், விழுப்புரம் தஞ்சா வூர், சேலம் தூத்துக்குடி திருப்பூர் வேலூர் நியோ மற்றும் காரைக்குடி ஆகிய இடங்க ளில் டைடல் நியோ மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவை மட்டுமன்றி நாமக்கல், திருவண்ணா மலை, விருதுநகர், திரு நெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மொத்தம் 388 கோடி ரூபாய் செலவில் மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை பரவலான முறையில் விரிவுபடுத்துவதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது.






