இந்துக்களாகிய நாம் குறைந்தது 3 -4 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் எம்.பியும், பாஜக நிர்வாகியுமான, நடிகை நவ்நீத் ராணா கூறியுள்ளார்.

முன்னாள் நடிகை

முன்னாள் தென்னிந்திய சினிமா நாயகியான நடிகை நவ்நீத் ராணா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து விட்டார். தமிழில், விஜயகாந்துடன் ‘அரசாங்கம்’, கருணாஸ் உடன் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தி விட்டார். தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

சுயேச்சை எம்பி

எம்எல்ஏ-வான ரவி ராணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு , 2014 மக்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதைதொடர்ந்து, 2019 மக்களவைத் தேர்தலில் அமராவதி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

பாஜகவில் இணைந்த நவ்நீத் ராணா

பாஜகவில் இணைந்த நவ்நீத் ராணா, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

3-4 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்

இந்நிலையில், ராஜாக்க கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய நவ்நீத் ராணா, “சமீபத்தில் ஒரு மௌலானா தனக்கு 4 மனைவிகள், 19 குழந்தைகள் இருப்பதாக ஓப்பனாக பேசினார். அதிக குழந்தைகள் பெற்றெடுப்பதன் மூலம் அவர்கள் இந்தியாவை பாகிஸ்தானாக மாற்ற திட்டமிட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்

“அப்படியென்றால் இந்துக்களாகிய நாம் ஏன் ஒரே குழந்தையுடன் திருப்தி அடைய வேண்டும் ” என கேள்வி எழுப்பியுள்ளார்.

நவ்நீத் ராணா-வின் பேச்சுக்கு பலவேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.