தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாடு நடைபெற்றது.
இதில் பங்கேற்ற முதல்வர் முக.ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு திமுக அரசு வழங்கியுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
- தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு பெற்றுள்ள உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ.5,000-ஆக உயர்வு.

- உலமாக்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- கோவையில் புதிய வக்ஃபு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
- இஸ்லாமியர்களுக்கான அடக்கஸ்தலம் அமைக்க மாநகராட்சி பகுதிகளில் இடங்கள் அடையாளம் காணப்படும்.
- இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் போன்ற 5 அறிவிப்புகளை வெளியிட்டார்.
கும்பகோணம் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்துடன் இணைந்துள்ள ‘கும்பகோணம்’ இனி தனி மாவட்டமாக இருகக வேண்டும் என்பதற்காக, தமிழ்நாட்டில் 39வது மாவட்டமாக கும்பகோணத்தை அறிவிக்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






