சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.85.80 லட்சம் செலவில் நிறுவப்பட்ட கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கன்னிமாரா நூலகத்தில், சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கன்னிமாரா நூலகத்தில், தத்துவஞானியும், பொதுவுடைமை இயக்கங்களின் முன்னோடியான கார்ல் மார்க்ஸின் திருவுருவச்சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சுமார் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் இந்த உருவச்சிலை மிக நேர்த்தியாக நிறுவப்பட்டுள்ளது.

அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் “வீர வணக்கம், வீரவணக்கம்… கார்ல் மார்க்சுக்கு வீர வணக்கம்…” என்று கையை உயர்த்தி முழக்கமிட்டனர்.

சிற்பிக்கு கௌரவம்

அதைதொடர்ந்து, கார்ல் மார்க்ஸ் சிலையை வடிவமைத்த சிற்பி கார்த்திகேயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார்.

முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் பற்றிய புகைப்பட கண்காட்சியை அனைவரும் பார்வையிட்டனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள்

அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பி.சண்முகம், பாலகிருஷ்ணன், ராம கிருஷ்ணன், சி.ஐ.டி.யு. சவுந்தரராஜன், வீரபாண்டியன் உள்ளிட்டோரும் கார்ல் மார்க்ஸ் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.