அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) இணைந்துள்ளது.

மீண்டும் ஒன்றிணைந்த அமமுக:

நீண்ட கால அரசியல் மோதல்களுக்குப் பிறகு, வரவிருக்கும் தேர்தலைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் (அமமுக) கைகோர்த்துள்ளன. இது தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

வலுபெறும் ​வாக்கு வங்கி:

குறிப்பாக தென் மாவட்டங்களில் அமமுக-விற்கு இருக்கும் கணிசமான வாக்கு வங்கி, அதிமுக கூட்டணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிந்து கிடந்த வாக்குகள் மீண்டும் ஒருங்கிணைய இது வழிவகுக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

​திமுகவை வீழ்ந்த வியூகம் :

திமுக தலைமையிலான கூட்டணியை வீழ்த்துவதே தங்களின் முதல் இலக்கு என இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். பொது எதிரியை வீழ்த்த ஒன்றுபடுவதே காலத்தின் கட்டாயம் என டிடிவி தினகரன் தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார்.

​தொகுதிப் பங்கீடு:

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஒரு அங்கமாக இருந்து, அதிமுக-வின் கீழ் அமமுக குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட
திட்டமிடப்பட்டுள்ளது.

இபிஎஸ் வரவேற்பு

“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.