‘இந்தியா’ கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை சீமான் புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

சென்னையில், செய்தியர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான்
“தமிழகத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி வரப்போகிறது. ‘இந்தியா’ கூட்டணி வலிமையாக இருக்க முக்கிய காரணம் ஸ்டாலின் தான் என்று புகழாரம் சூட்டினார். ஸ்டாலின் இல்லை என்றால், இந்தியா கூட்டணியே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதனால் தான், மூத்த காங்கிரஸ் தலைவர்கள், ஸ்டாலினுக்கு ‘ஆதரவு’ தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதைதொடர்ந்து, தமிழகத்தில் 10.25 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். தமிழகத்தில் ஐந்தாண்டுகளில் கடன் தான் வளர்ந்துள்ளது; வேறு எந்த வளர்ச்சியும் இல்லை என்றும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.