“இறுதி மூச்சு உள்ளவரை தவெக தான்” என்று தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகியான அஜிதா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அஜிதா தர்ணா போராட்டம்

தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை விட, அக்கட்சியின் நிர்வாகிகள் பற்றி தான் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அப்படி தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகியான அஜிதா பற்றி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்திற்கு சென்று, “தனக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும், கட்சியில் மாநில அளவில் பதவி வழங்க வேண்டும்..” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனது தூத்துக்குடி ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

விஜய் காரை வழிமறித்து..

ஒரு நாள் முழுவதும் கட்சியின் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். தவெக தலைவர் ‘விஜய்யை பார்த்தே தீர வேண்டும்’ என அஜிதா தீர்மானமாக இருந்தார். விஜய்யின் காரை வழிமறித்து பேச முயன்ற அஜிதா-வை தவெக மாநில நிர்வாகிகளான நிர்மல் குமார் ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சமாதானப்படுத்தி, அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

 

இது தவெக கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இருப்பினும் தனது போராட்டத்தை மாலையில் அஜிதா முடித்துக் கொண்டார்.

தலைவர் தளபதி விஜய்..!

இந்நிலையில் இன்று, “இறுதி மூச்சு உள்ள வரை என் தாய் கழகமான தமிழக வெற்றிக் கழகத்தோடும், எம் தலைவர் தளபதி விஜய் அவர்களோடும் மட்டும் தான் எனது அரசியல் பயணம் தொடரும்..” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அஜிதா மீது நடவடிக்கையா..?

தற்போது மா.செ., பதவி கிடைக்காத விரக்தியில் அதற்கு முரணாக செயல்படுவதாக சாடும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், கட்சிக்கு உழைப்பதை விடுத்து பதவிக்கு ஆசைப்படுவது சரியா? என கேட்கின்றனர். அவர் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று தவெக-வினர் பேசிக்கிறாங்க..!