1,000 அடி அளவிற்கு மெகா சுனாமி அலைகள் தாக்கும்- அமெரிக்காவை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

அமெரிக்கா மேற்கு கடற்கரையை 1,000 அடி சுனாமி அலைகள் தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் பசிபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்சன் மண்டலத்தில் 1,000 அடி உயர மெகா சுனாமி அலை ஏற்படலாமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகளை 6.5 அடி வரை திடீரென தாழ்த்தி, வெள்ளப் பரப்பை விரிவாக்கி, சியாட்டில், போர்ட்லேண்ட் உள்ளிட்ட நகரங்களை நிமிடங்களில் மூழ்கடிக்கக் கூடிய பேரலைகள் உருவாக்கலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த சுனாமி பேரலையால் 30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ஏற்படும் என்றும், 1,70,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடையும் என்றும், 81 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தலாம் என விர்ஜினியா டெக் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.  தெற்கு வாஷிங்டன், வடக்கு ஒரிகான், வடக்கு கலிபோர்னியா ஆகிய நகரங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக உள்ளன. அலாஸ்கா மற்றும் ஹவாய் ஆகியலையும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை அபாயங்கள் காரணமாக ஆபத்தில் உள்ள.

எனவே, ஆரம்ப எச்சரிக்கையை அடுத்து வலுவான கட்டமைப்புகள், மற்றும் அவசர தயார்நிலை பயிற்சிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று அந்த ஆய்வு வலியுறுத்துகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில், அடுத்ததாக எட்டு புள்ளி அளவு நிலநடுக்கம் ஏற்பட 15 சதவீத வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் படி, அடுத்த 50 ஆண்டுகளுக்குள் எட்டு புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட 15 சதவீத வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

ஆப்கானிஸ்தானில் ஒரு அங்குலம் கூட தர முடியாது- டிரம்பிற்கு தாலிபான்கள் பதிலடி!

ஆப்கானிஸ்தான் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு தாலிபான்கள் பதிலடி கொடுத்துள்ளனர். சீனாவின் எல்லையில் ஆப்கானிஸ்தானின் பஹ்ராம் விமானப்படைத் தளம் உள்ளது. இதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்…

செக் வைக்கும் அமெரிக்கா- எச்1பி விசா விண்ணப்ப கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு!

அமெரிக்காவில் இதுவரை எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அதனை 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பணியமர்த்த வேண்டுமென்றால்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *