ஆக.19-ம் தேதி தான் கெடு- தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பிஹார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆக.19-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் ஆக-1-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

குறிப்பாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி சிறப்பு செய்தியாளர் சந்திப்பை வெளியிட்டு தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டு எப்படி நடைபெற்றது என்பது குறித்து விளக்கமளித்தார். பிஹாரில் பாஜக தலைவர்கள் ஒவ்வொருவரும் 2 வாக்காளர் அட்டை பெற தேர்தல் ஆணையம் உதவியதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், பிஹாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறிகள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாய சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வாரத் தொடங்கிய இந்த வழக்கில் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், சட்டப்படி, நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மாலா ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிஹார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். மேலும் இதுதொடர்பான அறிக்கையை 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் மக்கள் தெளிவு பெறவும், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாகவும் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை தேவை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஆதார் கார்டுகள், எபிக் எண்கள் செல்லுபடியாகும் ஆதாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts

‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவனை கொன்று சமையலறையில் புதைத்த மனைவி!

‘த்ரிஷ்யம்’ படப்பாணியில் கணவனை கொலை செய்து சமையலறையில் புதைத்த மனைவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில, அஹமதாபத்தைச் சேர்ந்தவர் சமீர் அன்சாரி(35). இவர் கடந்த 2024-ம் ஆண்டு திடீரென…

ஷாக்…மாமியார் வீட்டில் தூணில் கட்டி வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட மருமகன்!

மைத்துனர் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *