
பாகிஸ்தானில் சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் போது கராச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 64 பேர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து 1947 ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தான் பிரிந்து சென்றது. இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் பாகிஸ்தானில் ஆகஸ்ட் 14-ம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் கராச்சியில் சுதந்திர தினக்கொண்டாட்டம் என்ற பெயரில் சிலர் துப்பாக்கியால் சுட்டதில் 8வயது குழந்தை உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதில் அஜிதாபாத்தில் இளம்பெண் மீது குண்டு பாய்ந்தது. கொரங்கியில் ஸ்டீபன் என்பவர் கொல்லப்பட்டனர். 64 பேர் துப்பாக்கிக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்துள்ளனர்.
கராச்சியில் இது போன்று கடந்த காலங்களிலும் வன்முறை நடந்துள்ளது. ஜனவரி மாதம் மட்டும், நகரம் முழுவதும் ஐந்து பெண்கள் உட்பட 42 பேர் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்ததாக ஏஆர்ஒய் நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வுகளின் போது மேலும் 233 பேர் காயமடைந்தனர். ஜனவரி சம்பவங்களில் கொள்ளை முயற்சிகளை எதிர்த்தபோது ஐந்து பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் வான்வழியாக துப்பாக்கியால் சிலர் சூட்ட போது உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு தொடர்பான இறப்புகளின் அதிகரிப்புக்கு தனிப்பட்ட தகராறுகள், விரோதங்கள் மற்றும் கொள்ளை முயற்சிகளின் போது எதிர்ப்பு ஆகியவை காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்காமல் தேசிய விழாக்களைக் கொண்டாடுமாறு பொதுமக்களை போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.