தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற விரும்பவில்லை- ஷாக் கொடுத்த நாகர்கோவில் மாணவி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து பட்டம் பெறுவதை தவிர்த்து விட்டு பல்கலைக்கழக துணைவேந்தரிடம் நாகர்கோவிலை சேர்ந்த மாணவி பட்டம் பெற்ற நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவியிடமிருந்து பட்டம் பெற மாணவிகள் வரிசையாக வந்தனர்.அப்போது ஆராய்ச்சிக்காக பட்டம் பெற வந்த நாகர்கோவிலை சேர்ந்த  மாணவி ஜுன் ஜோசப் என்பவர் பட்டத்தைப் பெறுவதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி அருகே வந்தபோது, அவரைப் புறக்கணித்துவிட்டு, பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகரிடம் காட்டி வாழ்த்து பெற்று விட்டு மேடையில் இருந்து இறங்கிச் சென்றார். அவரின் இந்தச் செயலால், ஆளுநர் ஆர்.என்.ரவி மட்டுமல்லாது, விழா மேடையில் இருந்தவர்களும், பட்டம் பெற வந்த மாணவ, மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெறுவதை தவிர்த்த மாணவி ஜுன் ஜோசப் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் பட்டம் பெற விரும்பவில்லை” என்று தெரிவித்தார். இதனால், பட்டமளிப்பு விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Posts

வீர வசனம் பேசும் மு.க.ஸ்டாலின் பம்மி பதுங்கிக் கொள்வது ஏன்?- இபிஎஸ் கேள்வி

வீர வசனம் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கான கேள்விகளை, குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பற்றிக் கேட்டால் மட்டும் பம்மிப் பதுங்கிக் கொள்வது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி…

அதிமுகவின் ஸ்விட்ச் போர்டு டெல்லியில் இருக்கிறது- மைத்ரேயன் பகீர் குற்றச்சாட்டு

அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய ஸ்விட்ச் போர்டாக டெல்லி இருக்கிறது என்று மைத்ரேயன் கூறியுள்ளார். சென்னையின் பிரபல புற்றுநோய் நிபுணரான மைத்ரேயன் கடந்த 1991-ல் பாஜகவில் இணைந்து, மாநில செயற்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *