வீர வசனம் பேசும் மு.க.ஸ்டாலின் பம்மி பதுங்கிக் கொள்வது ஏன்?- இபிஎஸ் கேள்வி

வீர வசனம் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கான கேள்விகளை, குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பற்றிக் கேட்டால் மட்டும் பம்மிப் பதுங்கிக் கொள்வது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஒரு மாணவருக்கு கை முழுமையாக சிதைந்துள்ளதாகவும், மற்றொரு மாணவருக்கு கண்ணில் காயம் எனவும் செய்திகள் வருகின்றன.பள்ளி மாணவர்கள் இடையே கத்திக் குத்து, புத்தகப் பையில் அரிவாள், அரசுக் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு… “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்ற புகழோடு அஇஅதிமுக ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டை, ‘ஸ்டாலின் மாடல்’ அரசு இட்டுச்சென்றுள்ள நிலை இது தான்.

அரசுக் கல்லூரிக்குள் வெடிகுண்டு வருவதற்கும் வழக்கம் போல ‘ஆக.. தனிப்பட்ட காரணம்’ Justification அளிக்க இந்த அரசு முயற்சிக்க நினைத்தால், அதற்கு இப்போதே வெட்கித் தலை குனிந்துக் கொள்ளட்டும். அரசுக் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வரும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலையில், இப்போதாவது தனது Denial Zone-ல் இருந்து வெளியே வருவாரா இந்த பொம்மை முதல்வர்? நான் அரசியல் ரீதியான விமர்சனங்கள் வைத்தால் மட்டும் பாய்ந்து வந்து வீர வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான கேள்விகளை, குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பற்றிக் கேட்டால் மட்டும் பம்மிப் பதுங்கிக் கொள்வது ஏன்? படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல!

நாட்டு வெடிகுண்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். ஆயுதங்கள், வெடிகுண்டு என தமிழ்நாட்டை கொலைக் களமாக மாற்றி வரும் திமுக ஆட்சியிடம் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற விரும்பவில்லை- ஷாக் கொடுத்த நாகர்கோவில் மாணவி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து பட்டம் பெறுவதை தவிர்த்து விட்டு பல்கலைக்கழக துணைவேந்தரிடம் நாகர்கோவிலை சேர்ந்த மாணவி பட்டம் பெற்ற நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ்நாடு…

அதிமுகவின் ஸ்விட்ச் போர்டு டெல்லியில் இருக்கிறது- மைத்ரேயன் பகீர் குற்றச்சாட்டு

அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய ஸ்விட்ச் போர்டாக டெல்லி இருக்கிறது என்று மைத்ரேயன் கூறியுள்ளார். சென்னையின் பிரபல புற்றுநோய் நிபுணரான மைத்ரேயன் கடந்த 1991-ல் பாஜகவில் இணைந்து, மாநில செயற்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *