கனமழையால் சோகம்: சுவர் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழப்பு

டெல்லியில் விடிய விடிய மழை பெய்ததில் சுவர் இடிந்து விழுந்து இரண்டு சிறுவர்கள் உள்பட எட்டு பேர் பலியான சோக நிகழ்வு நடைபெற்றுள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்தது பெய்தது.  சாஸ்திரி பவன், ஆர்.கே.புரம், மோத்தி பாக், கித்வாய் நகர் பகுதியில் கனமழை பதிவானது. இதன் காரணமாக சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது. டெல்லியில் இன்று நாள் முழுவதும் மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டெல்லியின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடிய விடிய பெய்த மழையால் டெல்லி நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், டெல்லி ஹரி நகர் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியானார்கள். இன்று நடைபெற்ற இந்த கோரச்சம்பவத்தில் ஷபிபுல்(30), ரபிபுல்(30), முட்டு அலி(45), ரூபினா(25), டோலி(25), ருக்சானா(6), ஹசினா(7) உள்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம், குறிப்பாக மழைக்காலங்களில், பாதிக்கப்படக்கூடிய குடியிருப்புகளில் நகர்ப்புற பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு தன்மை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

ஜெகதீப் தன்கர் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாரா?: சஞ்சய் ராவத் கடிதத்தால் பரபரப்பு

இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உடல்நிலை எப்படியிருக்கிறது? அவர் எங்கே இருக்கிறார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சிவசேனா உத்தவ் அணியின் எம்.பி சஞ்சய் ராவத் எழுதியுள்ள கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த…

உத்தராகண்டை உலுக்கிய மேகவெடிப்பு- பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

உத்தராகண்ட் மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கு, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சாமோலி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *