பெரும் சோகம்…கடலில் படகு கவிழ்ந்து 68 பேர் பலி

ஏமனில் அகதிகள் சென்று படகு கடலில் கவிழ்ந்ததில் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்ம 7 4 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்வாதாரங்களைத் தேடி ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக சட்டவிரோதமாக கடல்வழியாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர். அப்போது கடலில் படகு கவிழ்ந்து உயிரிழப்பு சம்பவம் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஏமனில் தற்போது மீண்டும் படகு கவிழ்ந்து பெரும் விபத்து நடந்துள்ளது.

ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் இருந்து 154 பேர் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோத அகதிகளாக படகில் சென்று கொண்டிருந்தனர். மத்திய தரைக்கடலில் ஏமன் கடற்பகுதியில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது அகதிகளின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஏமன் கடற்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில், 12 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனாலும் இந்த விபத்தில் 68 அகதிகள் உயிரிழந்தனர். எஞ்சிய 74 பேர் கடலில் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் எத்தியோப்பியாவைச் சேந்தவர்கள் என்றும், காயமடைந்தவர்கள் ஜிஞ்சிபார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்- வீடுகளை விட்டு மக்கள் ஓட்டம்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வீதிகளுக்கு ஓட்டம் பிடித்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *