அதிர்ச்சி… பள்ளிச்சீருடையுடன் தூக்கில் தொங்கிய பிளஸ் 2 மாணவி!

திருவெறும்பூரில் பிளஸ் 2 மாணவி பள்ளிச்சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த கிருஷ்ணசமுத்திரத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி மூக்கையன், இவரது மனைவி ராஜேஸ்வரி துப்புரவுப் பணியாளர். இவர்களது மகள் கனிஷ்கா(17) பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இன்று காலை கனிஷ்காவின் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர். கனிஷ்கா பள்ளிச்சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்ல தயாராக இருந்தார். இந்த நிலையில் திடீரென வீட்டில், தாயின் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். வெகுநேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். உடனடியாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது கனிஷ்கா மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு கனிஷ்காவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கனிஷ்காவின் தந்தை மூக்கையன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிளஸ் 2 மாணவியான கனிஷ்கா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு கிளம்ப இருந்த பிளஸ் 2 மாணவி திடீரென தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

  • Related Posts

    ஷாக்…. பிரபல மருத்துவமனையில் நர்ஸ் மர்ம சாவு!

    பிரபல தனியார் மருத்துவமனையின் குளியலறையில் நர்ஸ் இறந்த நிலையில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரின் சந்திரசேகர் பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி ரவுத் என்ற…

    சாத்தூர் அருகே பயங்கரம்- பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலி

    சாத்தூர் அருகே சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் பொன்னுபாண்டியன் . இவருக்குச் சொந்தமான வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *