போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோருக்கு மிரட்டல்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்

சென்னை: கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்த காரணத்திற்காக, தமிழக நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவருக்கு மிரட்டல் விடுத்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு தமிழக நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவர் முத்து ரமேஷ் ஆதரவு தெரிவித்த காரணத்திற்காக, சமூக விரோதிகள் சிலர் அவருடைய வீட்டிற்கு சென்று, மிரட்டி அச்சுறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

 

தமிழர்களின் வாழ்வாதார உரிமையான கள் இறக்கும் உரிமையை மீட்பதற்கு முத்து ரமேஷ் துணை நின்றதை தாங்கிக்கொள்ள முடியாத சிலரின் இத்தகைய அச்சுறுத்தல் கோழைத்தனமானது. அச்சுறுத்தல் செய்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழ்நாடு காவல்துறை இனியும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.

அறவழியில் அமைதியாக நடைபெற்ற கள் இறக்கும் போராட்டத்தின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத ஆட்சியாளர்களின் தூண்டுதல் காரணமாகவே இத்தகைய மிரட்டி அச்சுறுத்தும் செயல்கள் நடந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் இனியும் தொடரக்கூடாது என்று எச்சரிக்கின்றேன்.

இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.

  • Related Posts

    மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்- வானிலை மையம் எச்சரிக்கை

    மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (ஆக.13) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமேற்கு மற்றும் அதனை…

    கல்லறை திருநாளில் ஆசிரியர்கள் எப்படி தேர்வுக்குச் செல்வார்கள்? – ஈபிஎஸ் கேள்வி

    கல்லறை திருநாளில் அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *