பிக்பாஸ் சீசன்-9 ஷோவில் ஒயிட்டு கார்டு மூலம் என்ட்ரியான நடிகர் பிரஜன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சின்னத்திரை நடிகர்
சன் டிவியில் ஒளிபரப்பான “பெண்” சீரியல் மூலம் சின்னத்திரை அறிமுகமானவர் நடிகர் பிரஜன். அதைத்தொடர்ந்து, கலைஞர் டிவி, சன் டிவி, விஜய் டிவி என பல சேனல்களின் சீரியல்களில் நடித்து விட்டார்.
இவர் நடித்த “காதலிக்க நேரமில்லை” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதன்மூலம் பிரஜன் மக்கள் மத்தியில் பெரும் அளவு பிரபலமானார்.

சின்னத்திரை டூ வெள்ளித்திரை:-
“தீக்குளிக்கும் பச்சை மரம், பழைய வண்ணாரப்பேட்டை” போன்ற சில படங்களில் கதாநாயகனாகவும்; சில படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார் நடித்த பிரஜன்.

பிக்பாஸ் பிரஜன்
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒயிட்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார். அவருடன் அவரது மனைவியான சான்ட்ராவும், ஒரு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இருவரில் முதலில் பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரஜன் வெளியேற்றப்பட்டுள்ளார். மொத்தம் 35 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரஜன் இருந்துள்ளார்.

பிரஜன் சம்பளம் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த பிரஜன் ஒரு நாளைக்கு ரூ.30,000 சம்பளம் பேசப்பட்டு, 35 நாட்களுக்கு சுமார் ரூ.10 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.


