சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் 96.240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஓராண்டாகவே தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான தங்கம் விலை நேற்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 2,000 ரூபாய்க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 96,000 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 12,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 96,240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதே போல வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 207 ரூபாய்க்கும், கிலோவுக்கு 8 ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


