
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான ‘லால் சலாம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிய இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.
இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அதோடு, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்திருந்தார். விக்னேஷ் , லிவிங்ஸ்டன், செந்தில் , ஜீவிதா , கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் துணை நடிகர்களாக நடித்தனர்.