தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ புயலால் ராமேஸ்வரம் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ராமேஸ்வரத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டுள்ள ‘டிட்வா’ புயல் தற்போது மணிக்கு 10 முதல் 13 கி.மீ. வேகத்தில் வட தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் பலத்த சூறைகாற்று வீசுவதால் அனைத்து ரயில்களும் மண்டபத்திலேயே நிறுத்தப்படுகின்றன. மேலும் ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்தாவது நாளாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனிடையே நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 2 விசைப் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 20 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிட்வா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


