பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கொடுத்த விளக்கம் – சிபிஎம் நிர்வாகி கேட்ட கேள்வி..?

“மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் மோடி நட்டு வச்ச செங்கலே! இன்னும் அப்படியே இருக்கு.. இதில் மதுரைக்கு எப்படி? எப்போது? மெட்ரோ ரயில் விடப்போகிறீர்கள் என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறுத்த மெட்ரோ நிர்வாகம்

மத்திய அரசின் ‘மெட்ரோ நிர்வாகம்’  தரப்பிலிருந்து மதுரை மாநகரத்திற்கும்; கோவை மாநகரத்திற்கும் மெட்ரோ ரயில் விடுவதற்கான சாத்தியங்கள் இல்லை என கூறப்பட்டுள்ளது.

அதற்கான காரணமாக ஒரு நகரத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட வேண்டுமானால் அந்த நகரத்தில் 20 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே சாத்தியப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவையிலும், மதுரையிலும் 20 லட்சத்துக்கு குறைவான மக்கள் தொகை உள்ளது.

இ.பி.எஸ் முதல்வரானால்..?

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசன், “திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பட்டுள்ளதாக பொய் பரப்புரை செய்கிறார்கள். திமுக அரைகுறை செய்தியை மக்களிடம் பரப்புவதில் கைதேர்ந்தவர்கள். டெல்லியில் இருந்து வந்த அறிக்கையை அரைகுறையாக எடுத்துள்ளார்கள். சுற்றுலா மற்றும் தலைநகர் என்ற அடிப்படையில் சில மாநிலங்களில் மெட்ரோ ரயிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ வேண்டும் என்பதற்காக அடிப்படை ஆய்வுகள் செய்யவில்லை. திமுக போராட்டம் செய்து நாடகமாடுகிறது. 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவோம்.

மதுரை எய்ம்ஸ் எங்கே?

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, “மதுரையில் மோடி நட்டு வைத்த எய்ம்ஸ் மருத்துவமனை. செங்கல் இன்னும் செங்கலாகவே இருக்கிறது!
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனால், ‘மெட்ரோ ரயில் ஓடும்’ என வானதி சீனிவாசன் சொல்கிறார்.

எடப்பாடி பழனிசாமியால் ஷேர் ஆட்டோ கூட ஓட முடியாது. மதுரை கோவையில் மெட்ரோ ரயிலை திமுக கூட்டணிதான் ஓட வைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வானதி சீனிவாசன் பேசிய கருத்திற்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Related Posts

தகாத உறவு…மனைவியை வெட்டிக் கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த கணவர்!

மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்துடன் செல்ஃபி எடுத்து அதை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ…

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை:10 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் கனமழை!

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இன்று (டிச.1) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தெற்குக் கடற்பகுதியில் உருவான டிட்வா புயலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புயல் பாதிப்பு காரணமாக கல்வி துறையிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *