போதைப்பொருள் வழக்கில் சிம்புவின் நண்பர் கைது – அடுத்து சிக்கப்போகும் சினிமா நடிகர்?

போதைப்பொருள் வழக்கில் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரும், முன்னாள் உதவியாளருமான சர்புதீன் உள்ளிட்ட செய்யப்பட்டுள்ளனர்.


அதிரடி சோதனை – சிக்கிய ஆதாரங்கள்

சர்புதீன் வீட்டில் நடைபெறும் பார்ட்டியில் வார இறுதியில் கலந்துகொள்ளும் சினிமா பிரபலங்கள், மாடலிங் துறையில் உள்ளவர்களுக்கு கொக்கெய்ன், மெத்தம்பெட்டமைன், OG கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவின் நெருங்கிய நண்பர் :-

சிம்பு நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ஓரளவு வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில், இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்தவர் ஷர்புதீன். இவர் தான் தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரும், முன்னாள் உதவியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நடந்தது என்ன..?

சென்னை திருமங்கலத்தில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தியாகேஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த சர்புதீன் என்பவருக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சர்புதீன், சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் சரத், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த சீனிவாசன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பறிமுதல் :-

மேலும், சர்புதீன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து 27 லட்சம் ரூபாய் பணம், மூன்று ஆப்பிள் ஐபோன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிம்பு-விடம் விசாரணையா?

ஏற்கெனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், நண்பர் கைதால் நடிகர் சிம்பு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எனவே நடிகர் சிம்பு-விடமும், போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்றும் பேசப்படுகிறது.

Related Posts

அரசு பேருந்துகள் மோதி கோர விபத்து – பலி எண்ணிக்கை 11ஐ தாண்டும் என தகவல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். கோர விபத்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.…

மீண்டும் கவர்ச்சி நடனம் ஆடிய நடிகை மீனாட்சி சவுத்ரி – பாடல் செம வைரல்!

தெலுங்குவில் வெளியான “பீமாவரம் பல்மா” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், மீனாட்சி சவுத்ரி ஆடிய நடன புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொங்கல் வெளியீடு! வரும் பொங்கல் பண்டிகை யொட்டி தெலுங்கு திரையுலகில் வெளியாக உள்ள “அனகனக ஓக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *