ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி..! உலக தலைவர்களுடன் தனித்தனியாக ஆலோசனை

கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
3 நாடுகள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சைப்ரஸைத் தொடர்ந்து, கனடாவுக்கு சென்றார். கனடாவில் உள்ள கனனஸ்கிஸ் (Kananaskis) பகுதியில் நடைபெற்ற 51ஆவது ஜி7 மாநாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர், உலக நாடுகளின் தலைவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாநாட்டின் இடையே, தென்கொரிய அதிபர் லீ ஜாவே-மியூங்கை சந்தித்துப் பேசினார். மேலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை சந்தித்துப் பேசினார். அப்போது, இருவரும் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

  • Related Posts

    நடிகர் விஜய்யை எதிர்த்து போட்டியா? – கேள்வியால் டென்ஷனான சீமான்

    விஜய்யை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று கூறினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக தொண்டர்கள் எனது தம்பி, தங்கைகள். அவர்கள் சின்னப்பிள்ளைகள் தானே? அவர்கள் பக்குவப்பட வேண்டும்.…

    அண்ணாமலைக்கு செக் வைக்கிறாரா நயினார் நாகேந்திரன்?… டெல்லிக்கு அவசர பயணம்

    அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சியினரும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *