மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 14,967 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய கல்வித்துறையின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை சிபிஎஸ்இ மூலம் நிரப்ப விண்ணப்பம் பெறப்படுகிறது. இதில் பல்வேறு பாடங்களில் முதுகலை பட்டதாரி, பட்டதாரி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தம் 14,967 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இதில் ஆசிரியர் பதவிகளில் மட்டும் 13,025 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கும் காலிப்பணியிடங்கள் உள்ளன. முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தகுதிகள்: முதுகலை பட்டதாரியாக இருத்தல் வேண்டும்
அதிகபட்சம் 40 வயது இருக்க வேண்டும்.
தமிழ் பாடத்தில் பி.எட் படித்து முதுகலை பட்டப்படிப்பு படித்து 50 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். M.Ed முடித்திருக்கலாம். பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்போர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட் படிப்பு அல்லது முதுகலை டிகிரியுடன் பிஎட் , எம்எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியை கையாள தெரிந்திருக்க வேண்டும். முதுகலை ஆசிரியர் பதவி (நிலை 8)- மாதம் ரூ 47,600 முதல் ரூ 1,51,100 வரையாகும்.
பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு (நிலை 7)- மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை. 2 கட்டத் தேர்வு நடத்தப்பட்டு நேர்காணல் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு https://www.cbse.gov.in/, https://kvsangathan.nic.in/, https://navodaya.gov.in/ ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


