உடலில் இருந்த காயங்கள்.. மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி கொலை வழக்கில் வெளியான பகீர் தகவல் – காதலன் செய்த கொடூரம்!

ஹரியானா மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி கொலை வழக்கில் அவரது காதலனே கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 
ஹரியானாவைச் சேர்ந்த 24 வயது மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி. இவர் தனது சகோதரியுடன் பானிபட் பகுதியில் வசித்து வந்தார். திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஷீத்தல் சிறு சிறு இசை ஆல்பங்களை தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜுன் 14ம் தேதி படப்பிடிப்புக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் ஷீத்தலின் சகோதரி பானிபட் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 16 ஆம் தேதி சோனிபட்டின் கார்கோடா பகுதிக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து ஷீத்தலின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடல் மற்றும் கைகளில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டது.

  • Related Posts

    28 ஆண்டுகளுக்குப் பின் ரீ – என்ட்ரி கொடுக்கும் டிஸ்கோ சாந்தி!

    28 ஆண்டுகளுக்குப் பின் புல்லட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடுத்த ரவுண்ட்டிற்கு டிஸ்கோ சாந்தி அடியெடுத்து வைத்துள்ளார். பழம்பெரும் நடிகர் ஆனந்ததின் மகளான டிஸ்கோ சாந்தி 1980 முதல் 1990-ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து…

    இந்தியாவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது- எச்சரிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்!

    நம் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. நமது குரல் திருடப்பட்டுள்ளது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நேற்று நடத்தினார். அப்போது பெங்களூரு மத்திய மக்களவைத்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *