தங்கம் விலை இன்று சரவனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்க நகை 94,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை திடீரென அதிகமாக உயர்வும், திடீரென குறைவதுமாக உள்ளது. கடந்த வாரம் இறுதி வரை விலை சரிந்து வந்த நிலையில், கடந்த 10-ம் தேதியில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. நவம்பர் 10, 11-ம் தேதிகளில் கிராமுக்கு 400 ரூபாயும், சவரனுக்கு 3,200 ரூபாயும் உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் 93,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,800 ரூபாய்க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 94,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதே போல வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 182 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஒன்பதாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


