சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விசில் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி நடிகர் விஜய்யின் தவெக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறஉள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தவெக, தேர்தலில் போட்டியிட விசில் சின்னத்தை ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.
தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், 1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஆணைப்படி, இந்திய தேர்தல் ஆணையத்திடம் விசில், ஆட்டோ ரிக்சா மற்றும் மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்களின் பட்டியலுடன் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.விருப்பத்தேர்வு சின்னங்களின் பட்டியலில் முதலிடத்தில் விசில் சின்னம் உள்ளது.
விசில் சின்னத்தை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்ல முடியும் என தவெக தலைவர் விஜய் கருதுகிறார்.எனவே, விசில் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை தவெக அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.


