நடிகர் கிஷோர் – பிரபல யூடிப்பர் டி.டி.எஃப் வாசன், நடிகை அபிராமி, குஷிதா இணைந்து நடித்துள்ள ‘ஐபிஎல்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

‘IPL -இந்தியன் பீனல் லா’ திரைப்படத்தில், கிஷோர், டிடிஎஃப் வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ‘ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசை – டிரெய்லர் வெளியிட்டு விழா
நடிகர் கிஷோர் – டிடிஎஃப் வாசன் இணைந்து மிரட்டும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது.

வெளியிட்ட கே.பாக்யராஜ் – பெற்றுக்கொண்ட இயக்குநர்கள்
இவ்விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

S.பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். “திரில்லர்” கதையாக உருவாகியுள்ள இப்படத்தை, ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் G.R. மதன் குமார் தயாரித்திருக்கிறார். இப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நேர்மையான விமர்ரசனங்களை
நடிகர் டி.டி.எஃப் (TTF) வாசன் பேசுகையில், ”இந்த படத்திற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என்னுடைய முதல் படம். நிச்சயமாக நிறைய தவறுகளை செய்திருப்பேன். படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களுடைய நேர்மையான விமர்சனங்களை வெளியிடுங்கள். நீங்கள் குறிப்பிடும் என்னுடைய குறைகளை நான் திருத்திக் கொள்கிறேன்.
எனக்கு கூச்ச சுபாவம்!
நான் கூச்ச சுபாவம் உள்ள பையன், இதை சொன்னால் யாரும் நம்ப மாட்டீங்கிறாங்க!
முத்தக் காட்சிக்கு ஒத்துழைப்பு
படப்பிடிப்பு தளத்தில் சக நடிகையான குஷிதா முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அதிலும் குறிப்பாக முத்த காட்சியில் சௌகரியமான பங்களிப்பை அளித்தார்” என்று டிடிஎஃப் வாசன் தெரிவித்தார்.






