
பல ஆண்டுகளாக, ஆண்களுக்கு ஒரு X மற்றும் ஒரு Y குரோமோசோம் இருப்பதாகவும், ஆண் வளர்ச்சியைத் தொடங்கும் முக்கிய மரபணுவை Y சுமந்து செல்வதாகவும் நமக்குக் கற்பிக்கப்படுகிறது. ஆனால் இப்போது,ஆண் குழந்தைகளுக்குக் காரணமான Y குரோமோசோம் மெதுவாக மறைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் எதிர்காலத்தில் ஆண்களே இல்லாமல் போகும் ஆபத்து ஏற்படுமா என்று ஆராய்ச்சியாளர்கள் கூடுதல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்களின் Y குரோமோசோம் எவ்வாறு மங்குகிறது?
சுமார் 900 மரபணுக்களைக் கொண்ட அதன் இணையான X குரோமோசோமுடன் ஒப்பிடும்போது, Y சிறியது; சுமார் 55 மரபணுக்களை மட்டுமே கொண்டுள்ளது.
நூற்றுக்கணக்கான மரபணுக்களைக் கொண்டிருக்கும் X போலல்லாமல், இத்தனை ஆண்டுகளில் அதன் பெரும்பாலான மரபணு உள்ளடக்கத்தை Y இழந்துவிட்டது. சில ஆராய்ச்சியாளர்கள் சுமார் 11 மில்லியன் ஆண்டுகளில் இது முற்றிலும் மறைந்துவிடும் என்று கணித்துள்ளனர். Y குரோமோசோம் இழப்பின் விளைவுகள் இன்று ஆண்களில் ஏற்கனவே வெளிப்பட்டு வருவதாக சில சான்றுகள் தெரிவிக்கின்றன.