வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, தவெக இடையே தான் போட்டி என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை இன்று சந்திததார். அப்போது அவர் கூறுகையில், ” வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, தவெக இடையே தான் போட்டி. மேலும் 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தான் செல்லும். தவெக தலைவர் விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு சென்றது வருத்தமளிக்கிறது. இருப்பினும், மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். பல கட்சிகளுடன் சட்டமன்றத் தேர்தல் குறித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார்.


