பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணை தாக்கிய புகாரில் இணையத்தள பிரபலர் ஜி.பி.முத்து, அவரது மனைவி உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யார் இந்த ஜி.பி.முத்து?
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தை சேர்ந்தவர் ஜி.பி.முத்து. டிக்-டாக், இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். விஜய் டிவியின் பிக்-பாஸ் சீசன்-7 நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்று அனைத்து மக்கள் மத்தியிலும் புகழ்பெற்றார். மேலும், “டியூட்” உள்ளிட்ட சில படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.

ஊர் பஞ்சாயத்து :-
ஜி.பி.முத்து நிலத்தகராறு ஊர் மக்களுடன் சண்டை, பஞ்சாயத்து என் பல்வேறு சர்ச்சைகளிலும், காவல்துறையினரின் வழக்குகளிலும் சிக்கியுள்ளார்.
நடந்தது என்ன..?
கடந்த 2ஆம் தேதி அன்று ஜி.பி.முத்துவின் 2 மகன்களும் தெருவில் நடந்து சென்றனர். இப்போது, 2 சிறுவர்களை அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரான முத்து மகேஷ் என்பவர் மிரட்டியதாக. திட்டியதாக கூறப்படுகிறது.

பெண் மீது தாக்குதல்,
இதனால் ஆத்திரமடைந்த ஜி.பி.முத்து; அவரது மனைவி அஜித்தா; உறவினர்கள் உட்பட 4 பேர் முத்து மகேஷ் வீட்டிற்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது முத்து மகேஷின் மனைவியை ஜி.பி.முத்து, அவரது மனைவி, உறவினர்கள் சேர்ந்து தாக்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான அப்பெண், வாயில் பற்கள் உடைந்து தலையில் பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஜி.பி.முத்து; மனைவி மீது வழக்கு பதிவு
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து குலசேகரப்பட்டிணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி ஜி.பி.முத்து, அவரது மனைவி அஜித்தா, அவர்களின் உறவினர்கள் என 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஒரு பெண் மீது குடும்பமாக தாக்குதல் நடத்தியுள்ளதால் விரைவில் ஜி.பி.முத்து கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


