நடிகைக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு கொடுத்தவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை ரஜினி(41). இவர் கன்னட, தெலுங்கு தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நவீன்ஸ் என்ற நபரிடமிருந்து ஃபேஸ்புக் கோரிக்கை வந்தது. ஆனால், அந்த கோரிக்கையை நடிகை ரஜினி நிராகரித்தார்.
ஆனால், மெசஞ்சர் மூலம் நடிகைக்கு அந்த நபர் ஆபாச செய்திகளை அனுப்பத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை ரஜினி, அந்த நபரின் ஃபேஸ்புக் கணக்கை ஃபிளாக் செய்தார். ஆனாலும், வெவ்வேறு பெயர்களில் ஃபேஸ்புக் ஐ.டிக்களை உருவாக்கி அதில் இருந்து நடிகை ரஜினிக்கு அந்தரங்க உறுப்புகளின் வீடியோக்கள்,ஆபாசமான உரைகளை தொடர்ந்து அனுப்பியுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்த இந்த டார்ச்சரால் நடிகை ரஜினி மனஉளைச்சலுக்கு உள்ளானார்.
இதனால் அவரை நாகரபாவி பகுதியில் உள்ள உணவகத்திற்கு நவம்பர் 1-ம் தேதி வரவழைத்து நடிகை ரஜினி கண்டித்துள்ளார்.அப்போது அவர் நடிகையிடம் அநாகரீமாக நடந்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸாரை அங்கு நடிகை ரஜினி வரவழைத்துள்ளார். அங்கு வந்த போலீஸார், சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் பெயர் நவீன் கே மோன் எனத் தெரிய வந்தது பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு உலகளாவிய தொழில்நுட்ப ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் டெலிவரி மேலாளராக அவர் பணியாற்றியதும் தெரிய வந்தது. லண்டன், பாரிஸ், ஆம்ஸ்டர்டாம், பெர்லின், சூரிச், வார்சா மற்றும் நியூயார்க்கில் அலுவலகங்கள் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து நவீன் கே மோனை கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


