“மஞ்சுமல் பாய்ஸ்” திரைப்படம் சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த மலையாள திரைப்படம் என கேரள மாநில அரசின் 9 விருதுகளை வென்றுள்ளது.
“மஞ்சுமல் பாய்ஸ் – வசூல் சாதனை”
சிதம்பரம் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மஞ்சுமல் பாய்ஸ்’. 2024-ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்றது.
இப்படம் மலையாள சினிமா வரலாற்றில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் படம் என்கிற சாதனையை படைத்தது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இளையராஜா பாடல்
தமிழ்நாட்டில் “மஞ்சுமல் பாய்ஸ்” வெற்றி பெற்றதன் காரணம் இளையராஜா இசையில் ‘குணா’ படத்தில் இடம்பெற்ற “கண்மணி அன்புடன் காதலன்…!” பாடல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்றது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

9 விருதுகள்…
இந்நிலையில், 2024ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் “மஞ்சுமல் பாய்ஸ்” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த கலை இயக்குனர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த சவுண்ட் டிசைன் மற்றும் சிறந்த சவுண்ட் மிக்சிங் உள்ளிட்ட 9 விருதுகளை அள்ளியுள்ளது.
ரசிகர்கள் கொண்டாட்டம்:-
இதன்மூலம், இந்த ஆண்டின் கேரள திரைப்பட விருதுகளில் அதிக வெற்றிகளை பெற்ற திரைப்படமாக ‘மஞ்சுமல் பாய்ஸ்’ சாதனை படைத்துள்ளது. ரசிகர்கள், மஞ்சுமல் பாய்ஸ் படம் விருதுகளை வென்ற செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.

சிறந்த நடிகர் மம்மூட்டி
மேலும், பிரமயுகம் படத்தில் நடித்ததற்காக நடிகர் மம்மூட்டி-க்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது…!


