சன் மியூசிக்” தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் வி.ஜே. ரியோ ராஜ். இவருக்குன்னு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
பெண்கள் மத்தியில் மிகப் பிரபலமான ரியோ, விஜய் டிவியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” சீரியலில் நடித்து புகழ்பெற்றார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அறிமுகம் :-
பிறகு 2019 ஆம் ஆண்டு “நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்தார். அதன்பிறகு “ஜோ, ஸ்வீட் ஹாட்..” போன்ற படங்களிலும் நடித்தார்.

“ஆண்பாவம் பொல்லாதது”
தற்போது இவர் நடிப்பில் வெளியாகி உள்ள “ஆண்பாவம் பொல்லாதது” படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகர் ரியோ ராஜூக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த “ஜோ” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘ஆண்பாவம் பொல்லாதது’, படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது.

ஆண்களுக்கு ஆதரவாக
சமூகத்தில் ஆண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளையும்; திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண் என்னென்ன பிரச்னைகளை சமாளிக்கிறார், எதிர்கொள்கிறார் என்பதை இப்படம் பேசுகிறது.
‘விவாகரத்து’ என்று வரும்போது பெண்கள் பக்கம் தான் நீதியும், சட்டமும் இருக்கிறது என்பதை இப்படம் நகைச்சுவையாக மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

இப்படத்தை இயக்கிய கலையரசன் தங்கராஜ் “ஆண்பாவம் பொல்லாதது” படத்தை இயக்குவதற்கு முன்பாக பல்வேறு வழக்குகளை ஆராய்ந்து இப்படத்தின் கதையை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் வெற்றியின் மூலம் அடுத்த தலைமுறைக்கான முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்து உள்ளார் நடிகர் ரியோ ராஜ்


