கரூர் சம்பவத்திற்கு தனிநபர் மட்டும் காரணம் கூற முடியாது என நடிகர் அஜித்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு மறைமுகமாக ஆதரவு
தனியார் டிஜிட்டல் ஊடகத்திற்கு நடிகர் அஜித் குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், கரூர் சம்பவம் பற்றியும்; மறைமுகமாக தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும் பேசி உள்ளார்.

வீடியோவை ஷேர் செய்யும் விஜய் ரசிகர்கள்
கரூர் சம்பவத்தை பற்றி, நடிகர் அஜித் பேசிய அந்த வீடியோவை, விஜய் ரசிகர்களும்; தவெகவினரும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.
பேட்டியில் அஜித் குமார் கூறியதாவது, “கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அந்த தனி நபரை மட்டுமே காரணமாக சொல்ல முடியாது. எல்லோரும் அதற்கு பொறுப்பு என்றார்
நடிகர் அஜித் கேட்கும் கேள்விகள்?
“கிரிக்கெட் போட்டியை காண கூட்டம் சேரும் போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதில்லை, தியேட்டர்களிலும் சினிமா பிரபலங்களை பார்க்கும் போது மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்றும்;
ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி நாம் யார் என்பதை காட்டக்கூடிய சமுதாயமாக மாறிவிட்டோம். இது முடிவுக்கு வர வேண்டும்.
“கூட்டத்தைக் கூட்டுவது பெருமையா..?” என்றும் நடிகர் அஜித்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


