சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.
இந்த நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகின்றன. அதாவது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்று (நவம்பர் 1) சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 காசு குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் 1,750 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமும் செய்யப்படவில்லை.. அதன்படி, 868.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


