தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் ரம்யா கிருஷ்ணன்.
பாகுபலி படத்தில் நடித்து “ராஜமாதா” என்று ரசிகர்களால் நடிகை ரம்யா கிருஷ்ணன் அழைக்கப்படுகிறார்.

கவர்ச்சி நடனம் :-
சிம்புடன் “குத்து” படத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ்; விஜயகாந்தின் “கேப்டன் பிரபாகரன்” படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா..’ பாடல் மற்றும் “நரசிம்மா” படத்தில் ஒரு கவர்ச்சி ஆட்டம் என ஒருசில படங்களில் குத்துப் பாட்டுக்கு கவர்ச்சியாக நடனமும் ஆடியுள்ளார்.


ரம்யா கிருஷ்ணன் சொன்ன குட்டி ஸ்டோரி
நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், “தான் எப்படி சினிமாவுக்கு வந்தேன்?” என்பது பற்றி கெட்டி ஸ்டோரியாக கூறியுள்ளார்.
அவர் கூறிய குட்டி ஸ்டோரி.., “படிப்புக்கும்; Exam-க்கும் பயந்து தான், நான் சினிமாவுக்கு வந்தேன். எங்க வீட்ல சினிமாவில் நடிக்கிறதுக்கு Permission இல்லை. அவங்க கூட சண்டை போட்டு, அவங்களை ஒத்துக்க வச்சு அதுக்கப்புறம் சினிமாவில் நடிச்சு மெல்ல, மெல்ல வளர்ந்தேன்..!” என்றார்.

மேலும், “ஆரம்பத்தில் நான் நடிச்ச படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. எனக்கு சரியான அங்கீகாரமும் கிடைக்கல… 7 வருஷத்துக்கு அப்புறம் தான் எனக்கான அங்கீகாரமும், வெற்றியும் சினிமாவில் கிடைச்சது..!” அப்படின்னு இத்தனை வருஷம் சினிமா வாழ்க்கையை ரொம்ப சிம்பிளா சொல்லி முடிச்சிட்டாங்க நடிகை ரம்யா கிருஷ்ணன்.

போன தலைமுறை, இந்த தலைமுறை, அடுத்த தலைமுறை என மூன்று தலைமுறைகளின் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.


